டராஸ் நினைவிடத்தில் ஜனாதிபதி, ராஜ்நாத் சிங்  மலரஞ்சலி

by Editor / 26-07-2021 04:41:48pm
டராஸ் நினைவிடத்தில் ஜனாதிபதி, ராஜ்நாத் சிங்  மலரஞ்சலி

 


 (திங்கள்) கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லி போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நரவேன், விமானப்படை தலைவர் ஏர்மார்ஷல் ஆர்.கே.எஸ். பதாவ்ரியா, கடற்படை துணை தலைமை அட்மிரல் அசோக்குமார், சிஐஎஸ்சி துணை அட்மிரல் அகுல் ஜெயின் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். கார்கில் வீரர்களின் தியாகத்தை இவர்கள் நினைவு கூர்ந்தனர்.


கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஆக்கிரமித்தது. இது பனி சூழ்ந்த மலை முகடுகளை கொண்ட பகுதி ஆகும். இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களை எதிர்த்து தீவிரமாக போரிட்டனர். ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போர் சுமார் 3 மாதங்கள் நடைபெற்றது.
இந்தப் போரில் பாகிஸ்தான் தரப்பில் ஏராளமான வீரர்கள் பலி ஆனார்கள். இந்திய தரப்பில் 559 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஆபரேஷன் விஜய் போரில் வெற்றி பெற்றதாக 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. 22-வது கார்கில் போர் வெற்றி தினம்  கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 559 விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via