பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை வி .கே. சசிகலா தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார் .

by Admin / 11-03-2026 11:13:05pm
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை வி .கே. சசிகலா தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார் .

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை வி .கே. சசிகலா தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார் .விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நிகழ்ந்துள்ளது சசிகலா சமீபத்தில் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்திய நிலையில் இன்று சந்திப்பு நிகழ்ந்துள்ளது .2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு புதிய மூன்றாவது அணி அல்லது மாற்று அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .பாமகவின் ஒரு தரப்பினர் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் டாக்டர் ராமதாஸ் தனித்து புதிய முடிவுகளை எடுக்க கட்சி பொதுக்குழுவால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது..

 

Tags :

Share via