செந்தில் பாலாஜிக்கு கிடைக்குமா ஜாமின்

by Staff / 29-08-2023 12:53:33pm
செந்தில் பாலாஜிக்கு கிடைக்குமா ஜாமின்

அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்துள்ளார். ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று திருப்பி அனுப்பிய நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக ஜாமின் மனு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை நடைபெற வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via