திருக்கார்த்திகை தீப திருவிழா- வெகு விமர்சையாக துவங்கியது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்கி தரும் திருதலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். இங்கு உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் திருக்காா்த்திகை தீப திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 26ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலின் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மாகதீபமும் ஏற்றபட உள்ளது.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று நகரின் காவல் தெய்வமான துர்ககையம்மன் உற்சவத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள ஊர் காவல் தெய்வமான துர்கையம்மன் ஆலயத்தில் முன்னதாக துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காலத்தில் துர்கையம்மன் காட்சியளித்தார். பின்னர் தீப ஆராதனை நடைபெற்று துர்கையம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்தார் அளித்தார்.
நாளை இரவு அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோவில் காவல் தெய்வமான பிடாரியம்மன் மாடவீதியுலாவும், வருகின்ற 17ம் தேதி காலையில் அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெறும்.
Tags : திருக்கார்த்திகை தீப திருவிழா- வெகு விமர்சையாக துவங்கியது.