ரயில் சேவைகளில் மாற்றங்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு. ரத்து செய்யப்படும் ரயில்கள்.

திருச்சூர் யார்ட் மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில்
நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக , ரயில் சேவைகளில் மாற்றங்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு*
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
1. மதுரையில் இருந்து மே 22, 2023 அன்று 16.10 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16344 மதுரை - திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா எக்ஸ்பிரஸ் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
2. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மே 21, 2023 அன்று 20.30 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16343 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
1. குருவாயூரில் இருந்து மே 22, அன்று 23.15 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் குருவாயூர் மற்றும் எர்ணாகுளம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் 23 மே, அன்று எர்ணாகுளத்திலிருந்து அதன் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரமமான 01.20 மணிக்கு புறப்படும்.
2. சென்னையில் இருந்து மே 21, அன்று காலை 09.00 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் மற்றும் குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
Tags :