நிலமற்ற விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு

வேளாண் பட்ஜெட்டில், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும், இயற்கை மரணத்துக்கான நிதி உதவி. 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி, 2,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :