குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

by Staff / 08-04-2023 05:05:54pm
குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே மாப்படுகை அய்யாவடி குளத்து மெயின் ரோட்டை சேர்ந்தவர் சங்கர் மகன் தீபக் ராஜ் (16). மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்த இவர், தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நண்பர்கள் சிலருடன் நேற்று கோவில் எதிரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஆழத்தில் இறங்கிய தீபக் ராஜ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். சிறிது நேரம் வரை காணாமல் போனதும் தீபக் ராஜை அவரது நண்பர்கள் தகவல் அறிந்த தீபக்ராஜன் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி தேடியுள்ளனர். அப்போது தீபக் ராஜை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீபக்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் குளத்தில்  மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories