நைஜீரியா கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு

by Staff / 03-09-2023 01:05:57pm
 நைஜீரியா கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு

நைஜீரியா நாட்டை சேர்ந்த அகஸ்ட்டீன், எட்வின் மற்றும் இம்மானுவேல் ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இவர்களது தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு கடந்த 30ம் தேதி புழல் சிறையில் அகஸ்ட்டீனை சந்தித்திருக்கிறார். அப்போது, சிறை வார்டன்கள் தங்கள் மூன்று பேரையும் தாக்கியதாகவும், தங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் சங்கரசுப்புவிடம் அகஸ்ட்டீன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் எம். சுந்தர், ஆர். சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, கடந்த 21ம் தேதி சோதனை நடத்திய போது அகஸ்ட்டீன் உள்ளிட்ட மூவரிடம் இருந்து செல்ஃபோன் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

இதனையடுத்து, மூவரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு வழக்கறிஞர்களை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கைதிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படும் துணை வார்டன் சாந்தகுமார் உடல்நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அறிக்கையின் அடிப்படையில் மூவருக்கும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via