நாளை தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம்
நாளை தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் விஜயின் அறிவுறுத்தலின் படி காலை 10 மணிக்கு பனை ஊரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளதாக கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சி பணிகளில் சரியாக செயல்படாத சில மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.நேற்று புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடந்த பரப்புரை நிகழ்விற்கு பின் கட்சியை கட்டமைப்பு உருவாக்கும் முகமாக இந்த கூட்டம் நிகழ்வுற இருக்கிறது. அண்மைக்காலமாக அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் வருகை காரணமாக பல்வேறு பணிகளை சட்டமன்றத் தேர்தல் நோக்கி நகர்தலுக்கான சூழலாக இது பார்க்கப்படுகிறது.
|
|
Tags :


















