தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1.26 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது-தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. . அதில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு காலை 6 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை அனுமதி அளிக்கப்படும் என்றும் அதை ஆன்லைன் வழியாக பதிவு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் நடத்தை விதி அமலானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1.26 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பணப் புழக்கத்தைக் கண்காணிக்க 2,106 பறக்கும் படைகள் மற்றும் 2,106 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 4,200-க்கும் மேற்பட்ட குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனஎன்றும்.
ரொக்கப் பரிமாற்றம் மட்டுமின்றி UPI மற்றும் டிஜிட்டல் வாலட் மூலமாக நடக்கும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் தமிழகத்தில் மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறும்.
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 30, 2026
வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: ஏப்ரல் 6, 2026
வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 7, 2026
மனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாள்: ஏப்ரல் 9, 2026
வாக்குப்பதிவு: ஏப்ரல் 23, 2026
வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026
Tags :


















