முன்னாள் அமைச்சர்  அரங்கநாயகம் காலமானார்

by Editor / 29-04-2021 05:21:17pm
முன்னாள் அமைச்சர்  அரங்கநாயகம் காலமானார்

 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் செ.அரங்கநாயகம். இவர் எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார். 
தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்தவர் 
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அரங்கநாயகம், கடந்த 4.9.2006 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறையும், கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறையும் என மொத்தம் 4 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அரங்கநாயகம்.
தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த அரஙகநாயகம்  தி.மு.க.வை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில்  உடல்நல குறைவால் சென்னையில் காலமானார்.

 

Tags :

Share via