தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு -நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் மே மாதம் 5 வரை நீட்டிப்பு தாம்பரத்தில் இருந்து வெள்ளி கிழமை வண்டி எண் 06035 புறப்பட்டு விழுப்புரம் , விருத்தாச்சலம் , திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி , ராஜபாளையம் , சங்கரன்கோவில், தென்காசி , கொல்லம் வழியாக சனிக்கிழமை திருவனந்தபுரம் சென்றடையும் ரயில் அங்கிருந்து வண்டி எண் 06036 ஞாயிறு அன்று புறப்பட்டு தாம்பரம் சென்றடைகிறது.இந்த ரயில் எப்போது புறப்படுகிறது.?.எப்போது சென்றடைகிறது...?திருவனந்தபுரத்திலிருந்து எப்போது புறப்பட்டு தாம்பரத்தை சென்றடைகிறது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இதேபோன்று நாகர்கோவில் - தாம்பரம் இடையே உள்ள சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ஏப்ரல் 13 முதல் மே 5 வரை 06012 - நாகர்கோவில் - தாம்பரம் எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கும்
06011 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு , மேல்மருவத்தூர் , விழுப்புரம், சிதம்பரம் , மயிலாடுதுறை , கும்பகோணம் , தஞ்சாவூர்,திருச்சி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,கோவில்பட்டி , திருநெல்வேலி வழியாக இயங்கும் முன்னதாக ( விழுப்புரம் , விருத்தாச்சலம் , திருச்சி வழியாக இயங்கியது குறிப்பட தக்கது )
Tags : தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு -நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு