தமிழக கல்வித்துறையில் புதிய மாற்றம் நாளை அறிமுகம்.

by Editor / 24-07-2023 11:50:52pm
தமிழக கல்வித்துறையில் புதிய மாற்றம் நாளை அறிமுகம்.

தமிழ் நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற செயலியை நாளை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கென உள்ள பாடங்களை 27,000 கருப்பொருள்களாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. இச்செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via