சிபிஎம் பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஸ்டாலினோடு சந்திப்பு.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஏ. பேபி, “தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை வீழ்த்த வேண்டும்” என்றார்.
Tags : சிபிஎம் பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஸ்டாலினோடு சந்திப்பு.