இளைஞரை வெட்டிக்கொலை செய்த ஓய்வுபெற்ற தலைமைக்காவலர்.

மதுரை ஆனையூரை சேர்ந்த 34 வயதான அழகுபாண்டி என்பவர் அதே பகுதியில் வசிக்கும் 75வயதான நடராஜன் என்பவரிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் வீட்டில் இருந்த அரிவாளால் அழகுபாண்டியை வெட்டியதில் வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து நடராஜன் மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடராஜன் திருச்சி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை காவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags : இளைஞரை வெட்டிக்கொலை செய்த ஓய்வுபெற்ற தலைமைக்காவலர்.