இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தாா் அ.தி.மு.க முன்னாள் அமைச்சா் வைத்தியலிங்கம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் ஓ பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர் படை மீட்பு அமைப்பின் முக்கிய முகமாக திகழ்ந்தோருமான பலத்த நாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர் பைத்தியலிங்கம் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தாா்.இதன் காரணமாக இன்று தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தம் சட்டமன்ற ராஜினாமா கடிதத்தை இன்று சட்டப்பேரவை சபாநாயகர் எம் அப்பாவிடம் அவர் நேரில் வழங்கினார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஓ பன்னீர்செல்வத்தின் அமைப்பில் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்த அவர் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணையும் வாய்ப்பு இல்லாததாலும் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்து உள்ளார். ஏற்கனவே, ஓ. பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து மனோஜ் பாண்டியன் தி.மு.கவில் இணைந்த நிலையில் அடுத்து வைத்துலிங்கமும் தி.மு.கவில் இணைந்து உள்ளதால் ஓ.பி.எஸ் _ன் பலம் மேலும் வலுவிழந்து வருகிறது. இவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் , குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் தி.மு.கவில் இணைய உள்ளதாக தகவல்.
Tags :


















