கேரள காவல்துறை முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஜேக்கப் தாமஸ் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைகிறார்.
கேரள காவல்துறை முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஜேக்கப் தாமஸ், முழுநேர பிரசாரகராக ஆர்.எஸ்.எஸ்.சில் இணையவிருக்கிறார். நாளை (அக் 1) தேதி எர்ணாகுளம் மாவட்டம் பலிக்காராவில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பதசஞ்சலனத்தில் அதிகாரப்பூர்வ ஆர்.எஸ்.எஸ். உடையணிந்து பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார்.“நான் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். ஆர்எஸ்எஸ் சின் ஒழுக்கமும் தன்னலமற்ற சேவையும் என்னை மிகவும் ஈர்த்தது. அவர்கள் உண்மையாகவே தேசப்பற்று கொண்டவர்கள். எந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினரும் தனிப்பட்ட நலனுக்காக செயற்படுவதை நான் பார்த்ததில்லை,”
என்று அவர் குறிப்பிட்டார்.
Tags : கேரள காவல்துறை முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஜேக்கப் தாமஸ் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைகிறார்.



















