கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை
கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது . இதற்காக மற்ற நாடுகளின் சட்டங்களையும், நிபுணர்களின் கருத்துகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது குழந்தைகளின் மனநலன் மற்றும் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தோனேசியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
கடந்த வாரம் பெங்களூரில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆன்லைன் கேமிங் மற்றும் சமூக ஊடக தளங்களில் குழந்தைகள் அதிகரித்து வருவதை பற்றி விவாதத்தின் போது மாணவர்களின் கல்வி செயல்திறன். உடல் தகுதி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கும் அதிகப்படியான திரை தேடல்களை குறித்து தம் கவலையை தெரிவித்த பொழுது இதற்கு பதிலாக பல்வேறு துணை வேந்தர்கள் கருத்துக்களை முன் வைத்தனர் கொரோனா தோற்றுக்குப் பிறகு வீட்டுப்பாடம் பணித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் கற்றல் போன்றவற்றை மொபைல் ஃபோன்கள் வழியாக பயன்படுத்துவதை மாணவர்கள் மேற்கொண்டு இருப்பதாகவும் கல்விச் சூழலில் ஒருங்கிணைந்த பகுதியாக மொபைல் போன்கள் இடம் பெற்று விட்டதாகவும் சுட்டி காட்டி. முழுமையாக செல்போனை பயன்படுத்துவதை தடை செய்வது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது என்றும் அதற்கு பதிலாக ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான அணுகலை கட்டுப்படுத்துதல், பெற்றோரின் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் குழந்தைகளிடையே சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துதல் போன்றவைகள் செய்யப்படுகிற பொழுது மாணவர்கள் தவறுகளில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் உள்துறைகளுடன் ஒருங்கிணைந்து ஐடி துறையால் முறையான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் குழந்தைகள் திரை நேரத்தை குறைத்து புத்தகங்கள் மற்றும் நூலகங்களில் அதிக ஈடுபாடு கொள்வதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும் ஊக்குவிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிகிறது.
Tags :


















