அதிமுக செயற்குழுக்கூட்டம் ஆகஸ்டில் நடக்க உள்ளது.

by Admin / 28-07-2026 01:26:54am
அதிமுக செயற்குழுக்கூட்டம் ஆகஸ்டில் நடக்க உள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் அழுத்த மாதம் நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டம். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு அதிமுகவிற்குள் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 85 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்த பின்பு அதிமுக செயற்குழு கூட்டத்தை கூட்ட பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுத்துள்ளார். அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய மாவட்ட ஆலோசனை கூட்டங்களை முன்னாள் அமைச்சர்களான எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம், தங்கமணி ,நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் புறக்கணித்ததின் காரணமாக தலைமைக்கு ஒத்துழைக்காதவர்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சிக்கு வலுவூட்ட வேண்டும் என்கிற முனைப்பில் செயற்குழு கூட்டத்தை பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி நடத்த உள்ளதாகவும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுதல் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெறுவதற்கான சூழலை உருவாக்குதல் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்சியில் இருந்து வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது காரணமாக ஏற்பட்ட தொய்வை சரி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து கூட்டத்தை கூட்டி கட்சியை வலு வேற்ற எடுக்கும் முயற்சியாக இது கருதக்கூடியதாக உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo