இடைத்தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்று த. வெ. க ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைய வேண்டும்.
இன்று சென்னையில் நடந்த திருமண விழாவில் ஒன்றில் பங்கேற்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தமிழகத்தில் த. வெ.க ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் மாநிலம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியதோடு மக்கள் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால், அதற்கு உரிய பதிலளிக்காமல் ஆளும் கட்சியினர் முன்னாள் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் மீது அவதூறுகளை வீசுவதாகவும் திசை திருப்பும் அரசியலில் அவர்கள் ஈடுபடுவதாகவும் பிற கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி நடத்துவதால், இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளதாக குறிப்பிட்டவர், இந்த இடைத்தேர்தலில் திமுக பெரும் வெற்றி தமிழக வெற்றி கழக ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைய வேண்டும் என்றும் மேலும் மக்கள் திமுகவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி தமிழக வெற்றிக்காக அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Tags :

















