கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,

by Editor / 01-09-2021 07:34:29pm
கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை -  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியதும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன் பேசுகையில், சிவகாசி பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன. இங்கு கால்நடைகள் அதிகமாக உள்ளன. இப்பகுதிக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்து தரப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், 60 கி.மீ தூரத்தில் நெல்லையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. ஆகவே புதிதாக கால்நடை மருத்துவமனை தேவையில்லை. சங்கரன்கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

இதனையடுத்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் செழியன், தஞ்சை, திருவிடைமருதூர் பகுதியில் கால்நடைகள் அதிகமாக இருப்பதால் அங்கு புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என கேரிக்கை விடுத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo