ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கொலை.. 3 பேர் சரண்

தூத்துக்குடி மாவட்டம் கொல்லம்பரும்பு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்து பாலகிருஷ்ணன், லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் கௌரியின் கணவர் கருணாகரன் தான் கொலைக்கு காரணம் என கூறி, உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக கருணாகரன், முத்து பாலகிருஷ்ணன் இடையே முன்விரோதம் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று மகேஷ், கற்பகராஜ், கருணாகரன் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.
Tags :