ராணிப்பேட்டை15 வயது சிறுமி படுகொலை- தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன சங்கம் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை புலிவலம் கிராமத்தில் ஜனனி என்ற 15 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதி வேண்டி விஸ்வகர்மா ஜெகத்குரு நிலவேம்பு சித்தர்ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தூத்துக்குடி மாவட்ட தலைவர் முருகன் மாவட்ட செயலாளர் முருகேஷ் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள்ஆகியோர் ஏற்பாட்டில் தூத்துக்குடியில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீ பாபுஜி சாமிகள்கலந்துகொண்டு தமிழகத்தில் விஸ்வகர்மா சமுதாயம் பல லட்சம் மக்கள் உள்ள சமுதாயம் இந்த சமுதாயத்திற்கு.ஒரு நெருக்கடியான பிரச்சினை வரும் பொழுது எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை காரணம் விஸ்வகர்மா சமுதாய மக்கள் .மற்றும் பல்வேறு சங்க அமைப்புகள் பேரவைகள்.ஒன்றுபட்டு ஓரணியில் செயல்படாத தான் காரணம்.மேலும் படுகொலை செய்யப்பட்ட ஜனனி என்ற சிறுமியின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் தகுந்த நிவாரணம் மற்றும் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த லாவண்யா என்ற சிறுமிக்கு அரசு நிவாரணமும் கிடைக்க வேண்டும் பல்வேறு நேரங்களில் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பல நேரங்களில் பாதிப்படையும் பொழுது சமுதாயம் ஒன்றுபடாமல் இருந்தால் எவ்வளவு மோசமான .பிரச்சனைகள் .வந்தால் நம்மால் சமாளிக்க முடியாது.ஆதலால் உறவின்முறை சங்கம் என்பது நம் உறவுக்கு பயன்படுத்திக் கொண்டு அரசியல் சமூக விடுதலை போன்றவைகள் எல்லாம் நாம் வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பில் அனைவரும் இணைந்து பணியாற்றுங்கள்,அப்பொழுதுதான் உங்களுடைய வாழ்வு பாதுகாப்பாக இருக்கும்,இந்த நிகழ்வில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கத்தின் தலைவர் தங்கராஜ் அவர்கள் மற்றும் பொருளாளர் கோவில்பட்டி ஆறுமுகம் ,தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் சேலம் முருகேசன் மாநில ஆன்மீக அணி அமைப்பாளர் திருப்பரங்குன்றம் சண்முகநாதன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்.முருகன்,மதுரை இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தினேஷ்குமார்,மற்றும் பல்லடம் சங்கர் குட்டி பலர் கலந்து கொண்டனர்.
Tags : Ranipet 15-year-old girl murdered - Tamil Nadu Vishwakarma Mahajana Sangam protests.



















