மோடியுடன் முதலவர் மு.க.ஸ்டாலின் நாளைஆலோசனை

by Editor / 17-05-2021 08:10:45pm
 மோடியுடன் முதலவர் மு.க.ஸ்டாலின் நாளைஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் உக்கிரமாக தாக்கி வருகிறது. டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில் பாதிப்பு மிகிவும் அதிகமாக உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் ஊரடங்கு விதித்துள்ளது. இதன் பலனாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது.
 
எனினும் மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் அனைத்து மாநிலங்களும் அதிகளவில் கோரப்பட்டதால் மாநில அரசுகளே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கலாம் என கூறியிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
அப்போது தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நிலவரம் குறித்து மு.க. ஸ்டாலின் எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுப்பார் என தகவல் வெளியாகியுள்ள

 

Tags :

Share via