"அனைவரும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்"மதுரை எம்பி சு.வெங்கடேசன்

காவல்துறையினர் விசாரணை அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், காவலர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் உட்பட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்குத்தான் காவல்துறையே தவிர, கொலை செய்வதற்கு அல்ல. ஜெயராஜ் & பெனிக்ஸ் கொலைக்கு பின்பும் இப்படி ஒரு கொலை நடப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என கண்டித்துள்ளார்.
Tags :