நெல்லையில் பட்டியலின சிறுவன் மீது தாக்குதல்: 4 பேரிடம் விசாரணை

by Editor / 05-11-2024 01:47:48pm
நெல்லையில் பட்டியலின சிறுவன் மீது தாக்குதல்: 4 பேரிடம் விசாரணை

 

திருநெல்வேலி மேலபட்டம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த கார் இவர் மீது மோதுவது போல் வந்துள்ளது. அப்போது காரை ஓட்டி வந்தவர்களிடம் சிறுவன் ஏன் இவ்வளவு வேகமாக வந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்த நபர்கள் சிறுவன் வீட்டிற்கே சென்று கொடூரமாக தாக்கி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறுவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டியலின சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைவெறி தாக்குதல் தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலைமுயற்சி, சாதிரீதியாக திட்டுதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

 

Tags : நெல்லையில் பட்டியலின சிறுவன் மீது தாக்குதல்: 4 பேரிடம் விசாரணை

Share via

More stories

Logo