அதிரடி காட்டிய அமைச்சர் மா.சு. 4 அரசு மருத்துவர்கள் அதிரடி பணிநீக்கம்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் பொறுபெற்றதிலிருந்தே அவ்வப்போது அரசு மருத்துவமனைகளில் திடீரென ஆய்வை மேற்கொண்டு வருகிறார். நோயாளிகளை காக்க வைத்து பணிக்கு தாமதமாக வரும் அரசு மருத்துவர்கள் மற்றும் முன்அறிவிப்பு இல்லாமல் விடுப்பு எடுக்கும் மருத்துவர்கள் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இன்று அவர் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், மருத்துவர்கள் உரியநேரத்தில் பணிக்குவராமல் இருந்ததை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை வேறு மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழகம்முழுவதுமுள்ள மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியலைகளை ஏற்ப்டுத்தியுள்ளது.
Tags :