பிரபல இந்திய பாடகர் மீது துப்பாக்கிச்சூடு

பிரபல இசையமைப்பாளரும் பஞ்சாபி பாடகருமான பன்டி பெயின்ஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபாப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. பன்டி பெயின்ஸ் அங்குள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பன்டியை தோட்டா தாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :