ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மார்க் முறைகேடு அதை மறைக்கும் விதமாக இன்றுசோதனை-முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

by Editor / 17-05-2025 10:05:45pm
ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மார்க் முறைகேடு அதை மறைக்கும் விதமாக இன்றுசோதனை-முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

திருவண்ணாமலை: ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் 15 மணி நேர சோதனை நிறைவடைந்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனையானது நடைபெற்றதாக தெரிகிறது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பேட்டி.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அதிகாரிகள் இன்று காலை வந்து சோதனை மேற்கொண்டார்கள்.எனது மனைவியிடம்  11 ஆயிரமும், என்னிடம் 4000 வீட்டு செலவுக்காக இருந்தது அதனை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

இரண்டு மகன்கள் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் வெள்ளி பொருட்கள் சில்லரை பொருட்கள் 10 கிலோவிற்கு இருந்தது. அதையும் பரிசு பொருட்கள் என கூறி கொடுத்து விட்டார்கள்.எனது இரண்டு மருமகள், தாயார் அணிந்திருந்த 80 கிராம் நகையும் கணக்கிட்டுவிட்டு கொடுத்துவிட்டார்கள். 

2016 க்கு முன் வரை நான் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வந்தேன் அப்போது சேமித்த பணத்தில் சொத்துக்களை வாங்கினோம். அப்போது அதன் சந்தை விலை மிகக் குறைவு. இப்போது சந்தை விலை அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில்  தவறான முறையில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இப்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மார்க் முறைகேடு செய்துள்ளார்கள். இதனை அனைத்து தொலைக்காட்சி பத்திரிகைகள் வாயிலாக மக்கள் பார்க்கிறார்கள். அதை மறைக்கும் விதமாக இன்று என் வீட்டிலும், மதுரையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.இதில் எந்த பொருளும் பறிமுதல் செய்யவில்லை.இதற்கு முன்பு நான் வாங்கிய சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார்கள்.இவையெல்லாம் சட்ட ரீதியாக நான் எதிர் கொண்டு பொய்யான வழக்கிலிருந்து மீண்டு வருவேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்காக கழக பொதுச்செயலாளர் அவர்கள் திமுக அரசை கண்டித்தும், முதல்வரை கண்டித்து அறிக்கையின் வாயிலாக கண்டனம் தெரிவித்தார் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக நின்ற கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.எடப்பாடியார் துணையிலும், சட்டத்தின் துணையோடும் இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்றும்,

3 முறை ஆரணி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று கோட்டையாக உள்ளது. மீண்டும் 2026 ம் வெற்றி பெறும் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்த பிறகு  முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி.

 

Tags : முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

Share via