நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிற கட்சியில் இருந்து 3000 க்கு மேற்பட்டோர் திமுகவில்இணைந்தனர்.

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிற கட்சியில் இருந்து 3000 க்கு மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் தங்களை திமுகவோடு இணைத்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் 8 மாவட்டச் செயலாளர் உள்பட 2,000 போ் கட்சியிலிருந்து விலகி தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.. கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுக கரையிட்ட துண்டுகளை அணிவித்து புன்னகையோடு அவர்களை கைக் குலுக்கி வரவேற்றார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில்பேசிய முதலமைச்சர் கட்சியை ஆரம்பித்த உடனே முதலமைச்சராக வரவேண்டும் என்ற கனவோடு பலர் கட்சியை ஆரம்பித்து உள்ளதாக தெரிவித்தார்.
Tags :