தங்கம் இன்று ஒரு கிராமிற்கு 25 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 27-09-2023 10:18:33am
தங்கம் இன்று ஒரு கிராமிற்கு 25 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த பத்து நாட்களாக தங்கத்தின் விலை 5500 விட குறைவாக இல்லாமல் ஏற்றம் இறக்கமாகவும் அதே விலை நிலைப்பாட்டிலும் இருந்து வந்த தங்கம் இன்று ஒரு கிராமிற்கு 25 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ,5,505 ரூபாயாக விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 5,480 க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் ஆபரண தங்கம் 43 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் ஒரு கிராம் சுத்த தங்கம்  24 கேரட் 5 ஆயிரத்து 950 ரூபாயாகவும் ஒரு பவுன் 47 ஆயிரத்து 600 ரூபாயாகவும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து 77 ரூபாய்க்கு விற்பனையாகிறது .ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது.

 

தங்கம் இன்று ஒரு கிராமிற்கு 25 ரூபாய் குறைந்துள்ளது.
 

Tags :

Share via