திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு

by Staff / 27-09-2023 12:06:01pm
திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு

விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பி.,யுமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமாவளவனிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். நேற்றை தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்த நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் நலம் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via