தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

by Admin / 23-01-2026 11:07:35pm
தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இன்று செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுதமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை இந்த பொதுக்கூட்டத்தின் மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,டிடிவி தினகரன் மற்றும் ஜி கே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர் .

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு ஒரே குடும்பத்திற்காக செயல்படுவதாகவும் ஊழல் மற்றும் போதைப்பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

திமுக அரசை சி.எம்.சி,கரப்ஷன்,மாஃபியா,,க்ரைம்  என அவர் வர்ணித்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் இரட்டை எஞ்சின் என்.டி.ஏ அரசு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். வணக்கம் என கூறி தொடங்கிய பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான இன்று மதுராந்தகத்தில் மக்களை சந்திப்பில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
 

Tags :

Share via