செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணை

by Staff / 10-09-2023 12:43:41pm
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை (திங்கள்கிழமை) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஜாமின் மனு மீதான வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்குமா? சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்குமா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், ஜாமின் மனு தொடர்பான வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த தினம் உத்தரவிட்டிருந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது புழல் சிறையில் உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo