கட்டிட காண்ட்ராக்ட்டரிடம் 21 லட்சம் மோசடி - திருநங்கை பபிதா ரோஸ் கைது.
திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த அ.புதுப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் (30) இவர், இலுப்பூர் பகுதியை சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் முருகேசன் என்பவரை ஏமாற்றி 21 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முருகேசன் வளநாடு போலீசில் புகார் செய்தார். இப்புகார் குறித்து வளநாடு போலீசார் அதன்பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான திருநங்கை பபிதா ரோசை தேடி வந்தனர். இந்நிலையில் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று விழுப்புரம் சந்தை பேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வரும் பபிதா ரோசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் மீது ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்ததாக புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :