மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மின் துறையை அதானிக்கு தாரை வார்க்கும் புதுச்சேரி அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி அதானிக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்தும், அரசின் பொது நிறுவனங்களை அதானிக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின்துறையை அதானிக்கு தாரைவார்க்கும் புதுச்சேரி அரசு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி பாராளுமன்ற எம். பி. வைத்திலிங்கம் தலைமையில் சாரம் அவ்வை திடலில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Tags :