சென்னையில் குப்பைகளை அகற்றும் பணியில் 20 ஆயிரம் ஊழியர்கள்

by Admin / 13-11-2021 04:46:59pm
சென்னையில் குப்பைகளை அகற்றும் பணியில் 20 ஆயிரம் ஊழியர்கள்

 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக  தேங்கிய மழைநீர் 620 மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.   

மழையின் காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள  பள்ளங்களை,, சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு சீர் செய்யப்படுகிறது.
 

தற்போது மழைநீர் வெளியேற்றப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 3 நாட்களாக பெய்த மழையில் அடித்து வரப்பட்ட திடக்கழிவுகளை அகற்ற  பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

 பிற நகராட்சிகளில் இருந்து 500 தூய்மை பணியாளர்கள் இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் என மொத்தம் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மழையின் காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு குழி மற்றும் பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய,  சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு சீர் செய்யப்படுகிறது.

 பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மண்டல அளவில் கண்காணிக்கிறார்கள். கடந்த 10 நாட்களில் 1,330 இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டு உள்ளன.

 

Tags :

Share via