சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 28 ஆண்டு சிறை
விழுப்புரம், சிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 22, இவர், வேளாங்கண்ணி பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2018ல் உடன் பணியாற்றும் பெண் ஒருவரை, அவரது உறவினரான, 12 வயது சிறுமி பார்க்க வந்தார். சிறுமி வீட்டிற்கு செல்ல, தன் பைக்கில் 'லிப்ட்' கொடுத்த கலியபெருமாள், வழியில் ஆள் இல்லாத இடத்தில் நிறுத்தி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். போக்சோ கோர்ட்டில் விசாரணை நடந்தது. நீதிபதி மணிவண்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். கலியபெருமாளுக்கு, 28 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 26, 000 ரூபாய் அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரைத்தார்.
Tags :