கலை கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்

திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் கடந்த 9ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், கல்லூரி வளாகத்தின் முன்பு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கியதில், இரண்டு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :