பசியை போக்க தமிழ்நாடு அரசு கொண்டு வந்த முன்னோடி திட்டங்கள்

by Staff / 28-05-2024 12:44:44pm
பசியை போக்க தமிழ்நாடு அரசு கொண்டு வந்த முன்னோடி திட்டங்கள்

பசியின் கொடுமையை போக்க தமிழ்நாடு அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ரேஷன் கடையில் ரூ.1க்கு 1 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்டது. பின்னர் வந்த ஜெயலலிதா அரசு, 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கியது. அதேபோல் கோயில்களில் அன்னதானம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இதனால் பெரும்பாலான ஏழை மக்கள் பயனடைந்தனர். தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய சத்துணவுடன் சேர்த்து காலை சிற்றுண்டி வழங்கும் முன்னோடி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via