11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை

by Staff / 28-05-2024 12:49:11pm
11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை

சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை அநீதி இழைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சிறுமியின் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், தையல் கடைக்காரர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரும் சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்பதால் இதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக சிறுமியை அடிக்கடி இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று (மே 27) சிறுமி தனது சித்தி வீட்டிற்கு சென்ற போது வயிறு வலி ஏற்பட்டுள்ளது. சித்தி விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி கூறியுள்ளார். இது பற்றி அனைத்து மகளிர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo