தொகுதி மறு வரையறை குறித்தான கூட்டத்தில் அதிமுக,தேமுதிக, மக்கள் நீதி மையம் கலந்து கொள்ளாது .

by Admin / 08-08-2026 12:50:24pm
 தொகுதி மறு வரையறை குறித்தான கூட்டத்தில் அதிமுக,தேமுதிக, மக்கள் நீதி மையம் கலந்து கொள்ளாது .

தமிழக அரசு இன்று நடத்தவுள்ள தொகுதி மறு வரையறை குறித்தான கூட்டத்தில் அதிமுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது புதுடெல்லியில் உள்ளதால் தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு அரசியல் நாடகம் என்றும் தொகுதி மறு வரையறை தொடர்பான மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ வரைவு மசோதா வராத நிலையில் இக் கூட்டம் தேவையற்றது என்றும் தமிழக மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனையான காவிரி நீர் விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அதை விடுத்துதொகுதி மறு வரையறை கூட்டத்தை நடத்துவது மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இக்கூட்டத்தில் தேமுதிக, மக்கள் நீதி மையம் கலந்து கொள்ளாது என்றும் தகவல்வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via
Logo