இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் ராஞ்சியில்.....

by Admin / 22-02-2024 10:27:45am
இந்தியாவிற்கும்   இங்கிலாந்துக்கும்  இடையேயான  நான்காவது  டெஸ்ட் தொடர் நாளை காலை 9.30  மணிக்கு ஜார்கண்ட் ராஞ்சியில்.....

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் ராஞ்சியில் ஜே .எஸ் .சி. ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.23ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் என்று 66 விழுக்காடு கருத்துக்கணிப்பும் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று 26 விழுக்காடு கணிப்பும் டிராவில் முடிவடையும் என்று எட்டு விழுக்காடு கருத்துக்கணிப்பும் வெளியாகி உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டு வெற்றிகளையும் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை பெற்றுள்ளது.வரும் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை முழுமையாக இந்தியா கைப்பற்றி வெற்றியை தனக்கான ஆக்கிக் கொள்ளும். மாறாக, இங்கிலாந்து வெற்றி பெற்றால், இரண்டுக்கு இரண்டு என்கிற சம விகிதத்தில் இரண்டு அணிகளும் இருக்கும். ஐந்தாவது போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதுவே இந்த தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்லும்.

 

 

Tags :

Share via