தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கவியரசர் முடியரசனார் சிலையை கழனி வாசலில் திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு பயணம் செய்திருந்தார். நேற்று திருப்பத்தூர் சிராவயலில் 3.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகாத்மா காந்தி, தோழர் ஜீவா . பின்னர் பாரதிதாசனுக்கு பிறகு குறிப்பிடத்தக்க கவிஞராக போற்றப்பட்ட கவியரசர் முடியரசனார் சிலையையும் கழனி வாசலில் திறந்து வைத்தார் .தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சுமார் ₹50 லட்சம் மதிப்பீட்டில் இந்தச் சிலையும் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது..திராவிட இயக்கத்தின் முன்னோடி கவிஞராகப் போற்றப்படும் முடியரசனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குன்றக்குடியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் மணிமண்டபத்தில் சிலைக்கு மரியாதை செலுத்தி சிறப்பு மலரையும் வெளியிட்டார்.
Tags :


















