குழந்தையை தத்தெடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் 12 வார மகப்பேறு விடுப்பு

by Admin / 18-03-2026 09:21:53am
குழந்தையை தத்தெடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் 12 வார மகப்பேறு விடுப்பு

குழந்தையை தத்தெடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் 12 வார மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என உச்சம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மூன்று மாதங்களுக்கும் குறைவான குழந்தையை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே 12 வார விடுப்பு வழங்கப்பட்டது. தற்போது தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது வரம்பை பொருட்படுத்தாமல் அனைத்து தாய்மார்களுக்கும் இந்த விடுப்பு கட்டாயம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது . உயிரியல் ரீதியாக பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இருக்கும் அதே உரிமைகளும் கடமைகளும் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் உண்டு என்றும் குழந்தை பராமரிப்பு என்பது தத்தெடுக்கும் முறையை பொறுத்து மாறாது என்றும் நீதிபதி ஜே பி பர்தி வாலா மற்றும் ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு தெரிவித்தது. பழைய சட்டப்பிரிவு சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாக கூறி அதை நீதிமன்றம் ரத்து செய்தது. தாய்மார்களுக்கான விடுப்பை உறுதி செய்வது மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் இந்த விடுப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இந்த தீர்ப்பானது தத்தெடுக்கும் முறையை ஒரு குழந்தை பெறுவதற்கான சாமான வழியாக அங்கீகரிப்பதோடு பெண்களின் இனப்பெருக்க சுயாட்சி உரிமையையும் உறுதி செய்கிறது.

 

Tags :

Share via