கட்சிகளிடம் ஆதரவு கோரும் த.வெ.க

by Admin / 06-05-2026 10:25:43am
 கட்சிகளிடம் ஆதரவு கோரும் த.வெ.க

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டும். அதன் பொருட்டு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அக்கட்சியும் இன்றைக்கு பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளது .விடுதலை சிறுத்தை கட்சிக்கும் ஆதரவு கோரி விஜய் தரப்பிலிருந்து கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் தகவல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பது சம்பந்தமாக நாளை மறுநாள் செயற்குழு கூட்டத்தை கூட்டி அதில் முடிவு எடுக்கப்படும் என்று இரு கட்சிகளின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் நாளை பதவி ஏற்பை மேற்கொள்ள இருப்பதால் கட்சிகளின் ஆதரவை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தம் கட்சி முதல் மாநாட்டிலே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo