பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசியல் களம் உருவாகி உள்ளது.

by Admin / 06-05-2026 12:47:27pm
பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசியல் களம் உருவாகி உள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசியல் களம் உருவாகி உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தை காட்சிகளோடு தொடர்பு கொண்டு உள்ள தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்.. தேர்தல் களத்தில் திமுக மட்டும் தான் தங்களுடைய எதிரி என்று பிரகடனப்படுத்தப்பட்டு தேர்தலில் சந்தித்த தமிழக வெற்றி கழகம். மற்ற கட்சிகள் என்ற பிரேமுக்குள் இருந்த அதிமுகவோடு பேச்சு வார்த்தை நடத்தி வருவது அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்கிற கருத்தை ஊர்ஜிதப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க இன்னும் 11 பேர் தேவைப்படுகிற நிலையில், அதற்கான முயற்சிகளில் தமிழக வெற்றி கழகம் தீவிரமாக இறங்கி உள்ளது. கொள்கை எதிரியாக சொல்லப்பட்ட பாஜகவிடம் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் உள்ளார். எதிரி என்ற நிலையில் உள்ள திமுக கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகளை தங்கள் ஆட்சியில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டு அது கிட்டத்தட்ட இறுதி  அடையும் நிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 10க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது போன்று மாற்றுக் கட்சியில் இருந்து தமக்கு தேவையான 11 உறுப்பினர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியையும் இந்த நேரத்தில் மேற்கொள்ளலாம். கட்சியிலிருந்து தேவைப்படுகிறவர்கள் வருகிற பட்சத்தில் அவருடைய பதவிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்பதனால் அது குறித்தும் இன்றைய சூழலில் யோசிக்கப்பட்டிருக்கலாம். எந்த மாதிரியான திட்டங்களோடு எதிரணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன என்று தெரியவில்லை. ஆனாலும், ஏதோ ஒரு பக்கம் பலமும் இன்னொருபக்கம் பலகீனமும்ஆகப் போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

 

Tags :

Share via
Logo