காங்கிரஸ் கட்சி தம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கி உள்ளனர்.

by Admin / 06-05-2026 01:39:37pm
 காங்கிரஸ் கட்சி தம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கி உள்ளனர்.

தமிழக வெற்றி காகத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக காங்கிரஸ் கட்சி தம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்ட கடிதத்தை பனையூர் அலுவலகத்திற்கு நேரில் அளித்து தங்களுடைய நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளுக்கு மேலாக திமுகவோடு இருந்த கூட்டணி உறவை முறித்துக் கொண்டு சென்றுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தோடு ஏற்படக்கூடிய கூட்டணி இனி பாராளுமன்றத்திலும் தொடரும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததை தொடர்ந்து தமிழக  வெற்றி கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஆக பலம் பெற்று இருக்கிறது.இன்னும் விசிக கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு சேர்ந்தால் இறுதி பெரும்பான்மையை தமிழக வெற்றி கழகம் பெறும்.

 பனையூர் அலுவலகத்திற்கு வந்த கிாிஷ்சோடங்கருக்கு விஜய் சால்வைஅணிவித்து மரியாதை.

 

Tags :

Share via
Logo