குற்றாலம் காவல்துறை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

by Editor / 15-11-2022 11:40:53pm
குற்றாலம் காவல்துறை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றசுற்றுலாத்தலமாகவும், குற்றாலம் அருவிகளின் நகரம் என போற்றப்படுகிறது குற்றாலம்,குற்றாலம்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் பழைய குற்றாலம் அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி,ஆகியவைகள்  குற்றாலம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் குற்றாலத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டு முழுமையான சீசன் காலமாக இருந்ததால் இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்தில் வந்து குவிந்தனர்.இந்த நிலையில் குற்றாலத்தில் சட்டவிரோதமாக ஏராளமான மசாஜ் சென்டர்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டுவருவதாகவும்,மேலும் ஏராளமான அனுமதி பெறாத விடுதிகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும்,குற்றாலம்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வியாபாரம்  நடந்து வருவதாகவும் மாவட்ட காவல்துறைக்கும் தொடர்ந்து புகார்கள் சென்றதைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் குற்றாலம் பகுதிகளில் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் தாமஸ் மீது புகார்கள் சென்றதைத் தொடர்ந்து குற்றாலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வந்த தாமஸ் என்பவரை நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் இன்று அதிரடியாக அவரை கட்டாய காத்திருப்புக்கு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தென்காசி,திருநெல்வேலி  மாவட்ட காவல்துறையினர்மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via