கல்லூரிகள் முன்பு குவிக்கப்பட்ட காவலர்கள்.

தமிழ்நாட்டில் செமஸ்ட்டர் தேர்வுகள் முடிந்து இன்று கல்லூரி திறப்பை ஒட்டி சென்னையில் முக்கிய கல்லூரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் ஊர்வலமாக வர இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதனை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநகரப் பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 'ரூட் தல' பிரச்சனை, படக்கட்டுகளிலும், பேருந்தின் மேற்கூறைகளிலும் மாணவர்கள் பயணிப்பதை தடுக்கவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags : கல்லூரிகள் முன்பு குவிக்கப்பட்ட காவலர்கள்